பாராளுமன்றம் கலைந்த பின்னர் தடுக்கப்பட்ட நிதியை ஜனாதிபதி எடுத்துக் கொள்வார்..!

0

அரசாங்கம் பெற்றுக் கொள்வதற்கு எதிர்பார்த்துள்ள 367 பில்லியன் நிதியை பாராளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னரும் ஜனாதிபதியினால் பெற்றுக் கொள்ள முடியும்.

அரசியல் யாப்பில் இதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு என தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

வெகுஜன ஊடகத்துறை அமைச்சில் இன்று நடைபெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பின் போது இராஜாங்க அமைச்சர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.

குறிப்பிட்ட அமைச்சர் இதற்காக மே மாதத்தில் நடைபெறவுள்ள பாராளுமன்ற அமர்வின் மூலம் அதற்கான அங்கீகாரத்தை பெற்றுக் கொள்ள முடியும் என்றும் தெரிவித்தார்.

எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர் கட்சியினர் இதனை நிறைவேற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தமிழ் சிங்கள புத்தாண்டில் பொது மக்கள் மத்தியில் பணம் புரள்வதை தடுப்பதே இவர்களின் நோக்கமாகும் என்றும் அவர் கூறினார்.

தற்பொழுது ஜனாதிபதி மற்றும் அரசாங்கம் பதவிக்கு தெரிவுசெய்யப்பட்டு இன்றுடன் 100 நாட்கள் பூர்த்தி அடைகின்றன.

இக் காலப் பகுதியில் பொது மக்கள் எதிர்பார்த்த விடயங்கள் தொடர்பில் கொள்கை ரீதியிலான தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.

மே மாதத்தில் நிலையான அரசாங்கம் அமைக்கப்பட்ட பின்னர் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.