நாளைய தினம் நாடளாவிய ரீதியில் அதிபர், ஆசிரியர்கள் பணிப் பகீஸ்கரிப்பு..!

0

நாடளாவிய ரீதியாக அதிபர் , ஆசிரியர்கள் நாளைய தினம் 26ஆம் திகதி சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

சம்பள முரண்பாடு தொடர்பான பிரச்சினை உள்ளிட்ட விடயங்களை அடிப்படையாக கொண்டு அவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ஆசிரியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.

இந்த போராட்டத்தில் 28ற்கும் மேற்பட்ட அதிபர் , ஆசிரிய சங்கங்கள் கலந்து கொள்ளவுள்ளன.

இவர்கள் அன்றைய தினத்தில் கல்வி அமைச்சுக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதுடன் ஒவ்வொரு மாவட்டத்தின் பிரதான நகரிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனால் நாடளாவிய ரீதியாக பாடசாலைகள் முற்றாக முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.