யாழில் சற்று முன்னர் 41 ஆவா குழுச் சந்தேக நபர்கள் கைது???

0

யாழ் மருதனார் மடம் பகுதியில் உள்ள இரண்டு விடுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பினையடுத்து 41 இளைஞர்கள் கைது செய்யப்பட்டு சுன்னாகம் பொலிஸ் நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

மருதனார் மடம், காங்கேசன்துறை வீதிப் பகுதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதிகளில் நூற்றுக் கணக்கான இளைஞர்கள் சந்தேகத்துக்கிடமான முறையில் கூடுவதாகப் பொலிசாருக்கு இரகசியத் தகவல் கிடைத்ததையடுத்து பொலீசாரும், பொலீஸ் விசேட அதிரடிப் படையினரும் இணைந்து குறித்த விடுதிகளைச் சுற்றி வளைத்துள்ளனர்.

பொலீசாருக்கு உதவியாக மேலதிகமாக இராணுவத்தினரும் களத்தில் இறக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் பொலீசாரும், இராணுவத்தினருமாக முற்றுகையிட்டிருந்த விடுதியினுள் நுழைவதற்காக விடுதி உரிமையாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அரசியல் பின்புலமுள்ள குறித்த விடுதி நிர்வாகத்தினை மீறி உள் நுழைய முடியாமல் படையினர் சுமார் இரண்டு மணி நேரத்துக்கு மேலாக அந்தப் பகுதியில் முற்றுகையில் ஈடுபட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

மிக நீண்ட போராட்டத்தின் பின்னர், விடுதியினுள் நுழைந்த படையினரால் அங்கு கூடியிருந்த 41 இளைஞர்களை இராணுவ ட்ரக் வண்டியிலும், தனியார் வாகனங்களிலும் ஏற்றப்பட்டு சுன்னாகம் பொலீஸ் நிலையத்துக்குக் கொண்டு சென்றுள்ளனர்.