சற்று முன்னர் வவுனியா பன்றிக் கெய்தகுளம் பகுதியில் பேரூந்து விபத்து ஐவர் பலி..!

0

வவுனியா பன்றிக் கெய்தகுளம் பகுதியில் பேருந்தும் வானும் நேருக்கு நேர் மோதியதில் ஐவர் பலியாகியதுடன் பலர் காயமடைந்து வவுனியா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை பேருந்துக்கு சிலர் தீ வைத்துள்ள நிலையில் விபத்துக்குள்ளான வானும் தீயில் எரிந்துள்ளது. இதன் போது வான் சாரதியும் தீயில் எரிவதாக தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியாவில் இருந்து பருத்தித்துறை நோக்கி சென்ற பேருந்தும் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு சென்ற வானுமே மோதியுள்ளது.

 

இதன்போது அங்கிருந்தவர்களால் பேருந்துக்கு தீ வைக்கப்பட்ட போது விபத்துக்குள்ளாகிய வானும் தீயில் எரிந்துள்ளது. இதன் போது வானுக்குள் இருந்த சாரதியும் தீயில் எரிவதாக தெரிவிக்கப்படுகின்றது.

காயமடைந்தார்கள் அம்புலன்களில் வவுனியா பொது வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் ஐவர் பலியாகியதுடன் இருபதுபேர் காயமடைந்துள்ளதாக அறிய முடிகின்றது.

தீப்பற்றிய வாகனங்கள் தீயணைப்பு படையினரால் அணைக்கப்பட்டு வரும் நிலையில் ஓமந்தை பொலிஸார விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.