திட்டமிட்ட வகையில் ஜப்பானில் ஒலிம்பிக் மற்றும் பரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும்..!

0

திட்டமிட்ட வகையில் டோக்கியோ ஒலிம்பிக் மற்றும் பரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் என்று ஜப்பான் தெரிவித்துள்ளது.

கொரோனா (கொவிட்-19) வைரஸ் பரவிவரும் பாரிய அச்சுறுத்தலின் மத்தியில் ஜப்பான் இது தொடர்பாக அறிவித்துள்ளது. ஜப்பான் அமைச்சரவை செயலாளர் இது தொடர்பாக தெரிவிக்கையில்,

சர்வதேச ஒலிம்பிக் குழு, டோக்கியோ நகர அரசாங்கம் மற்றும் அமைப்புக்களின் குழுக்களுடன் இது தொடர்பில் ஓன்றிணைந்து செயல்ப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

ஓலிம்பிக் சுடரொழி எடுத்து செல்லும் நிகழ்வு மார்ச் மாதம் 27 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. வீரர்கள் மற்றும் பார்வையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்து இது தொடர்பான திட்டத்தை முன்னெடுப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக ஜப்பானில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர்.