தெற்கு அதிவேக நெடுஞ்சாலை திறப்பு; உள்ளூர் செய்தியாளர்களுக்கு மறுப்பு..!

0

தெற்கு அதிவேக நெடுஞ்சாலை திறப்பு விழாவிற்கு செய்தி சேகரிக்க சென்ற இலங்கை உள்ளூர் ஊடகங்களில் செய்தியாளர்களிற்கு அனுமதி மறுக்கப்பட்டது. வெளிநாட்டு செய்தியாளர்களிற்கு மட்டுமே செய்தி சேகரிக்க அனுமதிக்கப்பட்டது.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் திறப்பு விழா இன்று மாத்தறை கொடகம பகுதியில் இடம் பெற்றது.

இதன் போது, செய்தி சேகரிக்க சென்ற உள்ளூர் ஊடகவியலாளர்கள் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டதாக, ஜனாதிபதி செயலகம் உத்தரவிட்டதாக அவர்கள் தெரிவித்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.