மன்னாரில் தீவிர இஸ்லாம் மதமாற்றம்; மாற்று நடவடிக்கை எடுக்குமா இந்து மதபீடங்கள்?

0

மன்னார் மாவட்டத்தில் வாழும் தமிழ் மக்களில் 2 ஆயிரத்து 26 தமிழ் பெண்கள் முஸ்லீம் இளைஞர்களை திருமணம் செய்தமை கண்டறியப்பட்டுள்ளதோடு 12 தமிழ் இளைஞர்கள் முஸ்லீம் பெண்களை திருமணம் செய்துள்ளனர்.

மன்னார் மாவட்டத்தின் 2018ஆம் ஆண்டு மாவட்டச் செயலகத்தினால் பிரதேச செயலக ரீதியில் திரட்டப்பட்ட தரவுகளின் பிரகாரமே குறித்த விபரம் கண்டறியப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் மன்னார் மாவட்டத்தில் 71 ஆயிரத்து 868 முஸ்லீம்கள் வாழ்கின்றனர். இவர்களில் 34 ஆயிரத்து 494 ஆண்களும் 37 ஆயிரத்து 374 பெண்களும் வாழ்கின்றனர்.

இவ்வாறு 71 ஆயிரத்து 868 முஸ்லீம்கள் வாழும் நிலையில் 69 ஆயிரத்து 854 இஸ்லாமியர்களே வாழ்கின்றனர். அதன் பிரகாரம் இஸ்லாமியர்களில் 34 ஆயிரத்து 506 ஆண்களும் 35 ஆயிரத்து 348 பெண்களுமே இஸ்லாமியர்களாக காணப்படுகின்றனர்.

இதன் அடிப்படையில் 2 ஆயிரத்து 26 தமிழ் பெண்கள் முஸ்லீம் இளைஞர்களை திருமணம் செய்தமை கண்டறியப்பட்டுள்ளதோடு 12 தமிழ் இளைஞர்கள் முஸ்லீம் பெண்களை திருமணம் செய்துள்ளமையும் உறுதிப் படுத்தப்பட்டுள்ளது.

இதே நேரம் மன்னார் மாவட்டத்தில் சைவ சமயத்தை பின்பற்றுபவர்கள் அற்ப சலுகைகளுக்காக கிறிஸ்தவ, இஸ்லாம் மதங்களுக்கு மாறும் பிரச்சனை நீண்ட காலமாக சுட்டிக் காட்டப்படுகின்ற போதும் இந்து மத பீடங்களோ, இந்து அமைப்புக்களோ கவனத்தில் கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.