கடவத்தை பொலிஸ் கான்ஸ்டபிள் கடத்தல்; சடலம் மீட்பு..!

0

கடத்தப்பட்டதாக கூறப்படும் கடவத்தை பொலிஸ் நிலைய கான்ஸ்டபிள் ஒருவர் 5 நாட்களின் பின்னர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

37 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிளே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

குறித்த பொலிஸ் கான்ஸ்டபிளின் சடலம் பன்னல – வேரகெர பகுதியில் உள்ள வனப் பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது .