வடக்கில் தமிழ் மாணவர்களுக்கு புற்றுநோயை உருவாக்கும் வகையில் போதைப் பாக்குகள் விற்பனை..!

0

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப் பொருள் கலக்கப்பட்ட இனிப்பு பாக்கு வடக்கில் தமிழர் பிரதேசங்களில் தொடர்ச்சியாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.

குறறிப்பபிட்ட இனிப்புப் பாக்கில் போதைப் பொருள் கலக்கப்பட்டுள்ளதை அரச பகுப்பாய்வு திணைக்களம் உறுதி செய்துள்ளது.

இதேவேளை அண்மையில் யாழ் நகரப் பகுதியில் சுகதாரப் பகுதியினர் சந்தேகத்துக்கிடமான வர்த்தக நிலையத்தை முற்றுகையிட்டு சோதனையிட்ட போது, அங்கு மாணவர்களுக்கு விற்பனை செய்யப்பட்டு கொண்டிருந்த இனிப்புகளை சுகாதாரப் பிரிவினர் கைப்பற்றினர். வர்த்தக நிலைய உரிமையாளரையும் சுகாதார பிரிவினர் நீதிமன்றத்தில் முற்படுத்தினர்.

சான்றுப் பொருளாக இனிப்பு பாக்கில் போதைப்பொருள் கலக்கப்பட்டுள்ளதா என்பதை கண்டறிய அதனை அரச பகுப்பாய்வுக்கு அனுப்புமாறு யாழ்ப்பாண மேலதிக நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி அரச பகுப்பாய்வு திணைக்களத்திற்கு பாக்கு அனுப்பப்பட்டது.

அரச பகுப்பாய்வு திணைக்களத்தின் ஆய்வு அறிக்கை கடந்த வெள்ளிக் கிழமை கிடைக்கப் பெற்றது. பாக்கில் போதைப் பொருள் கலந்துள்ளது என்பதை பகுப்பாய்வு திணைக்களம் உறுதி செய்திருந்தது.

இதை அடுத்து வர்த்தக நிலைய உரிமையாளர் மீதான வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது. எதிர்வரும் 4 ஆம் திகதிக்கு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு போதையூட்டப்பட்ட பொருட்கள் இனிப்புப் பொருட்கள் கலக்கப்பட்டு மாணவர்களுக்கு தெரியாமல் விற்பனை செய்யப்படுகின்றன எனப் பலரும் சுட்டிக் காட்டி வருகின்ற நிலையில், அது உறுதி செய்யப்பட்டுள்ளது.