மின்சார தடை நேரத்தில் 6 வயது சிறுமியை துஸ்பிரயோகம் செய்த 51வயது காமுகன்..!

0

ஊரில் மின்சாரம் தடைபட்ட நேரத்தில், வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த 51 வயதான ஒருவர், அவ்வீட்டிலிருந்த 6 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய சம்பவமொன்று பிபிலையில் இடம்பெற்றுள்ளது.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர், பிலிலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

அந்த சிறுமியும் அவருடைய பெற்றோரும் அருகிலுள்ள வீட்டில் நடத்தப்பட்ட மத போதனைக்கு (பனகேட்பதற்கு) சென்றுள்ளார். கொஞ்ச நேரத்தில், அந்த சிறுமி வீட்டுக்கு திரும்பியுள்ளார்.

அப்போது அவ்வீட்டில் சிறுமியின் தாத்தாவும் ஆச்சி மட்டுமே இருந்துள்ளனர். அந்த சிறுமி வீட்டுக்குள் நுழைந்த சில நிமிடங்களில் மின்சார தடையும் ஏற்பட்டுவிட்டது.

இத​னிடையே வீட்டுக்குள் நுழைந்து ஒளிந்திருந்த சந்தேகநபர், சிறுமியை துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கியுள்ளார். சிறுமியின் கூக்குரல் கேட்டு, ஒடோடிவந்த அச்சிறுமியின் பெற்றோரும் அக்கம் பக்கத்தினரும் சந்தேக நபரை மடக்கிப் பிடித்து பொலிஸில் ஒப்படைத்துள்ளனர்.