உலக சந்தையில் எரிபொருள் விலை குறைந்து பல மாதங்களான போதும் விலை குறைப்பு இல்லை..!

0

பெற்றோல், டீசல், மண்ணெண்ணை உட்பட எரிபொருள் விலைகளில் அதிகரிப்போ குறைப்போ தற்போதைக்கு மேற்கொள்ளப்படாது என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று காலை இடம் பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

கடந்த மாதங்களாக எரிபொருள் விலையை நிர்ணயிக்கின்ற விலைச் சூத்திரத்தை அமுல்படுத்தப்படாத காரணத்தினால் அரசாங்கத்திற்கு பாரிய நட்டம் ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் அந்த நட்டம் சமநிலையை அடையும் வரை விலைகளில் மாற்றம் ஏற்படுத்தப்படாது எனவும் அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்து.

இதேவேளை உலக சந்தையில் எரிபொருட்களின் விலை கணிசமான அளவு குறைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.