நிச்சயமற்ற எதிர்காலத்தை நோக்கி சிறுவர்களின் எதிர்காலம் – உலக சுகாதார ஸ்தாபம்

0

சிறுவர்கள் நிச்சயமற்ற எதிர்காலத்தை நோக்கி நகர்ந்து செல்கிறார்கள் என்று உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆரோக்கியமான மற்றும் உகந்த சூழலுடன் கூடிய எதிர்காலத்தை எந்தவொரு நாடும் சிறுவர்களுக்காக உறுதிப்படுத்தவில்லை என்று ஸ்தாபனத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

காலநிலை மாற்றம், துரித உணவு நுகர்வு கலாசாரம், குறைந்த வயதில் மது அருந்துதல் என்பன சிறுவர்களின் ஆரோக்கியத்தில் கூடுதல் தாக்கம் செலுத்தியிருப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தியிருக்கும் நாடுகளின் பட்டியலில் நோர்வே முதலாவது இடத்தில் உள்ளது. தென்கொரியா, நெதர்லாந்து, பிரான்ஸ், அயர்லாந்து, டென்மார்க் போன்ற நாடுகள் பட்டியலில் முன்னிலை வகிக்கின்றன.