எட்டு வயது சிறுவனைத் தாக்கிய தந்தை பொலிசாரால் கைது..!

0

எட்டு வயது மகனை கொடூரமாகத் தாக்கி அச்சிறுவனை மரமொன்றில் கட்டி துன்புறுத்திய தந்தையை மொனராகலைப் பொலிசார் நேற்று கைது செய்தனர்.

மொனராகலைப் பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலொன்றினையடுத்து குறித்த பகுதிக்கு விரைந்த பொலிசார் மரத்தில் கட்டப்பட்டிருந்த சிறுவனை மீட்டதுடன் சிறுவனை துன்புறுத்திய சிறுவனின் தந்தையையும் கைது செய்துள்ளனர்.

மொனராகலைப் பகுதியின் அலியாவத்தை தோட்டத்திலேயே குறித்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.

இந்நிலையில் துன்புறுத்தப்பட்ட சிறுவன் மொனராகலை அரசினர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இதையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் மொனராகலைப் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

குடியிருக்கும் வீட்டின் முன்னால் அசுத்தம் ஏற்படுத்தியமை குறித்தே அந்த சிறுவன் தனது தந்தையால் துன்புறுத்தப்பட்டமை ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.