முல்லைத்தீவில் பெற்ற மகளையே சீரழித்த காமுக தந்தை கைது..!

0

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான், முத்துஐயன் கட்டுப் பகுதியில் சிறுமியான மகளை நீண்ட காலமாக பாலியல் துஷ்பிரயேகத்துக்கு உட்படுத்திய தந்தையை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

முத்துஜயன் கட்டுப் பகுதியில் வசித்து வரும் 42 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை, தனது மூத்த மகளான 15 வயது சிறுமியை கடந்த மூன்று மாத காலமாக பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார்.

இது தொடர்பில் கிடைக்கப் பெற்ற தகவலை அடுத்து, சந்தேக நபரை கைது செய்த பொலஸார், முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப் படுத்தியுள்ளனர்.

இதன் போது, சந்தேக நபரை நாளை வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.