மஹிந்த தலைவர் – மைத்திரி தவிசாளர் சற்று முன்னர் வெளியாகிய அறிவிப்பு..!

0

தற்போதய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை தலைவராகவும் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேனவை தவிசாளராகவும் பெயரிடப்பட்டு புதிய கூட்டணிக்கான ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டுள்ளன.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் இணைந்து உருவாக்கியுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டணியையே பதிவு செய்வதற்கான ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டுள்ளன.

இந்த ஆவணங்கள் இன்று (திங்கட் கிழமை) சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகரவினால் தேர்தல் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்பட்டன.

சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களின் பிரகாரம், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கூட்டணிக்கு தலைமை தாங்க உள்ளார், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கட்சியின் தவிசாளராக பெயரிடப்பட்டுள்ளார்.

மேலும் இக் கூட்டணியின் செயலாளராக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவும், தேசிய அமைப்பாளர்களாக விமல் வீரவன்ச மற்றும் தயாசிறி ஜயசேகரவும் பெயரிடப்பட்டுள்ளனர்.

மேலும் குறித்த கூட்டணி எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மொட்டு சின்னத்திலேயே போட்டியிடும் என்றும் சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர அறிவித்துள்ளார்.