எடுப்பார் கைப்பிள்ளைகளால் கோட்டா அரசு வெகு விரைவில் வீட்டுக்கு..!

0

தற்போதைய அரசாங்கம் தொடர்பில் பல்வேறு தரப்பினரிடையே அதிருப்தியே இருந்து வருகின்றது. ஒருசிலர் தற்போதைய நிலை தொடர்பில் ஏதும் பேச முடியாது தங்களுக்குள் தாமே கண்ணீர் விட்டு வருகின்றனர். ஒருசிலர் வெளிப்படையாக அரசாங்கத்தை விமர்சித்தும் வருகின்றனர்.

இந்தவகையில் முத்தெட்டுவே ஆனந்த தேரர், தற்போதைய அரசாங்கத்தில் இருக்கின்ற அமைச்சர்கள் எவருடனும் தொலைபேசி அழைப்புக்களை மேற்கொள்ள முடிவதில்லை எனவும், சந்திப்புக்களை ஏற்படுத்த முடிவதில்லை எனவும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் இவ்வாறு நடந்து கொள்வதானது மிகவும் கவலைக்கிடமான செயல் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

சில அமைச்சர்களைத் தொடர்பு கொள்ள முனைகின்ற போது, அவர்களிடம் இருக்கின்ற எடுப்பார் கைப்பிள்ளைகளால் இயலாமல் போகின்றது. இதனால் ஜனாதிபதி மற்றும் அமைச்சர்கள் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை இல்லாமலாகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலை தொடருமாயின் சென்ற நல்லாட்சி என்ற பெயரில் இயங்கிய அரசாங்கத்தைப் போலவே தற்போதைய அரசாங்கமும் முகங்கொடுக்க வேண்டிவரும் எனவும் அதற்கான காலம் அதிக தூரத்தில் இல்லை எனவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

வலுவற்ற காலத்தில் தம்மோடு இருந்தவர்களைப் புறந்தள்ளி விட்டு, தற்போதைய அரசாங்கம் தனக்கான புதியதொரு வட்டத்தை அமைத்துக் கொண்டிருக்கின்றது எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Tamilpori.com இணையப் பக்கத்துடன் தொடர்பில் இருங்கள்.