நாளை கறுப்பு திங்கள்; முற்றாக முடங்குமா? பரீஸ் மெற்றோ சேவை..!

0

நாளை பெப்ரவரி 17 ஆம் திகதி திங்கட்கிழமை போக்குவரத்து முற்றாக தடைப்படும் எனவும், இது கறுப்பு திங்களாக இருக்கும் எனவும் தொழிற் சங்கம் அறிவித்திருந்தது.

எனினும் RATP தரப்பில், ‘கறுப்பு திங்கள்’ என பிரகனப்படுத்தும் அளவுக்கு போக்குவரத்து தடை எல்லாம் ஏற்படாது என மறுத்துள்ளது.

நாளை குறிப்பிட்ட சில சேவைகள் மாத்திரமே தடைப்பட உள்ளன. குறிப்பாக 2 ஆம், 5 ஆம் மற்றும் 12 ஆம் இலக்க மெற்றோக்கள் மாத்திரமே தடைப்பட உள்ளன.

RER A மற்றும் RER B ஆகிய இரு சேவைகளும் எவ்வித தடையும் இன்றி இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐந்து தொழிற் சங்கங்கள் நாளைய தினம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளன. இந்த பட்டியலில் CGT தொழிற்சங்கம் இணையவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.