தமிழர் தாயகத்தின் வளங்களை அரசு திட்டமிட்டு அபகரித்து வருகின்றது..!

0

தமிழர் தாயகத்தில் உள்ள வளங்களை சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்து அபகரித்து வருகின்றது என முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம் சாட்டியுள்ளார்.

திட்டமிட்ட ரீதியில் இந்த ஆக்கிரமிப்பு இடம் பெறுகின்றது எனவும் இதை தடுத்து நிறுத்தாவிட்டால் தமிழ் மக்கள் பெரும் பாதிப்பை எதிர் கொள்ளவேண்டி இருக்கும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

வடமராட்சி கிழக்கில் முன்னணியும் வடமராட்சி கிழக்கு கலை பண்பாட்டுப் பேரவையும் இணைந்து நடத்திய தமிழர் பண்பாட்டுப் பெருவிழாவில் உரையாற்றிய போதே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.