யாழ் தொழில் நுட்பக் கல்லூரியில் காடையர் அட்டகாசம்; நாளை கவயீர்ப்புப் போராட்டம்..!

0

யாழ் தொழில் நுட்பக் கல்லூரி வளாகத்திற்குள் புகுந்து மாணவர்கள் மீதும் ஆசிரியர்கள் மீதும் நடாத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்தும் கல்லூரியின் கற்றல் கற்பித்தல் பணியின் பாதுகாப்பை உறுதி செய்யக் கோரியும் நாளைய தினம் ஓர் கவனையீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

அதிகரிக்கும் வன்முறையின் உச்சமாக தொழில்நுடட்பக் கல்லூரிகளிற்கு உள்ளே காடையர்கள் புகும் அளவிற்கு நிலமை மோசமடைவது எதிர்காலத்தினையே கேள்விக்குறியாக மாற்றும் சம்பவமாக அமையக் கூடும் என்பதனால் இதனை ஆரம்பத்துலேயே தடுத்து நிறுத்துவதோடு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பினையும் உறுதி செய்ய வேண்டும் . தாக்குதலில் ஈடுபட்டோரை கைது செய்து சட்டத்தின் முன்பாக நிறுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தே குறித்த போராட்டம் இடம் பெறவுள்ளது.

இப் போராட்டம் நாளை காலை 9 மணிக்கு கல்லூரியின் முன்பாக இடம் பெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கல்லூரி நிர்வாகத்தினால் தெரிவிக்கப்பட்டது.

இதேவேளை குறறித்த சசம்பவம்் தொடர்்பில் தெரிய வருவதாவது,

யாழ்.தொழிநுட்ப கல்லுாாி புகு மாணவன் ஒருவரின் தொலைபேசி அழைப்லின் பெயரில் கல்லூரி வளாகத்திற்குள் உள் நுழைந்த குழுவினர் சுமார் அரை மணி நேரம் தொழில் நுட்பக் கல்லூரியை போர்க் களமாக்கியதனால் பணிப்பாளர், ஆசிரியர்கள், மாணவர்கள் பெரும் பதற்றமடைந்தனர்.

மாணவா்களிடையே ஏற்பட்ட வாய்த் தா்க்கம் காரணமாக ஓர் மாணவன் தொலைபேசியில் சிலரை அழைத்துள்ளார். இதனால் வெளியில் இருந்து வந்தகுழு உள் நுழைத்து தாக்குதலில் ஈடுபட்டதனால் ஆசிரியர்கள் அவ்விடத்திற்கு சென்ற போது ஆசிரியர்கள் மீதும் தலைக் கவசங்களால் தாக்கியதன் பின்பே ஒருவர் மடக்கிப் பிடிக்கப்பட்டார். இதன் போது உடனடியாக பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

இதனால் மோதலில் ஈடுபட்ட தொழிநுட்ப கல்லுாாி மாணவனும், தாக்குதல் நடாத்த வந்த ரவுடிக் கும்பலிற்கும் இருந்த தொடர்பு கைது செய்யப்பட்டவரின் வாக்குமூலத்தின் பிரகாரம் நிரூபனமாகியுள்ளது.

இதனிடையே ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டவரை விடுவிக்க முயன்றும் இயலாத நிலையில் மேலும் ஆறுபேர் வாள்கள் சகிதம் வருகை தந்தமையால் இரண்டாவது தடவையும் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

இவ்வாறு வாள்கள் சகிதம் வந்தவர்கள் வாயில் கதவு பூட்டியிருப்பதனைக் கண்டு கற்கள் கொண்டு உள்ளே நின்ற ஆசிரியர்களை தாக்கத் தொடங்கினர். இதன் போது பொலிசார் சம்பவ இடத்திற்கு வருகை தந்த நிலையில் தாக்குதல்தாரிகள் சிதறி ஓடியுள்ளனர். இதனையடுத்து மடக்கிப் பிடிக்கப்பட்டவர் பொலிசாரிடல் ஒப்படைக்கப்பட்டார்.

இதேவேளை மடக்கிப் பிடிக்கப்பட்டவரின் வாக்கு மூலத்தின் பிரகாரம் தொலைபேசியில் அழைத்த மாணவனும் இனம் கானப்பட்டுள்ளதோடு தாக்குதிற்கு வந்த ஏனையோரை இனம்கானும் பணியில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர்.

இதேநேரம் குறித்த சம்பவத்தில் 3 ஆசிாியா்கள் சிறு காயங்களுக்கு உள்ளாகியிருக்கின்றனா் என்பதும் குறிப்பிடத்தக்கது.