மொட்டுக்குள் கரைந்து போகும் சு.க; பொதுத் தேர்தலுக்கு முன்னர் கூட்டணி கிடையாது..!

0

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இடையில் பொதுத் தேர்தலுக்கு முன்னர் கூட்டணி அமைக்கப்பட மாட்டாது எனவும் மொட்டுச் சின்னத்தில் தேர்தலில் போட்டியிட நேரிடும் எனவும் பொதுஜன பெரமுனவின் தலைவர் ஒருவர் கூறியதாக சிங்கள பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது.

புதிய கூட்டணியை பதிவு செய்ய வேண்டுமாயின் மார்ச் மாதம் 10 ஆம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்படும் முன்னர் அதனை செய்ய வேண்டும். அதற்காக இரண்டு வார காலமே இருக்கின்றது.

புதிய கூட்டணியை பதிவு செய்ய வேண்டுமாயின் அதனை விரைவாக செய்ய வேண்டும். எனினும் தற்போது அது தொடர்பான எந்த அவசரமும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தரப்புக்கு இல்லை.

தெளிவாக தெரியும் விதத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்கள் புதிய கூட்டணி குறித்து அக்கறை காட்டவில்லை.

பொதுஜன பெரமுனவின் மொட்டுச் சின்னத்தில் போட்டியிடும் விருப்பத்தில் அவர்கள் இருக்கின்றனர் எனவும் பொதுஜன பெரமுனவின் அந்த தலைவர் கூறியுள்ளார்.

பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச இலங்கை திரும்பிய பின்னர் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, அவரும் இந்த நிலைப்பாட்டிலேயே இருந்தார் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.