ஊழல் மோசடி பற்றி கதைக்கும் விமல் வீரவன்ச பயன்படுத்தும் கதிரையின் விலை தெரியுமா?

0

சிறு மற்றும் நடுத்தர தொழில் விருத்தி அமைச்சர் விமல் வீரவன்ச பயன்படுத்தும் கதிரையின் விலை தொடர்பாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

சுமார் 06 இலட்சம் ரூபா பெறுமதியான கதிரையை அவர் கொள்வனவு செய்து பயன்படுத்தி வருவதாக ஜே.வி.பி கூறியுள்ளது.

மாத்தறை – தெனியாய பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய ஜே.வி.பியின் எம்.பி சுனில் ஹந்துநெத்தி இந்த தகவலை வெளியிட்ட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை தான் ஊழல் மோசடி பற்றி கதைத்தபடி மக்களின் வரிப் பணத்தை துஸ்பிரயோகம் செய்த விமல் தொடர்பில் கோட்டா அரசு எடுக்கப் போகும் நடவடிக்கை என்ன என மக்கள் எதிர் பார்க்கின்றனர்.