ஐம்பதாவது அகவையில் தமிழீழ விடுதலை இயக்கம்..!

0

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் ஐம்பதாவது ஆண்டு விழா எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை 16 ஆம் திகதி மாலை 3 மணிக்கு வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

தமிழ் தேசிய இனத்தின் அரசியல், சமூக, பொருளாதார விடுதலைக்கான அகிம்சை வழிப் போராட்டங்கள் பயனற்றுப்போன கால கட்டத்தில் தமிழ் தேசிய இனத்தின் சுதந்திர தேசத்துக்கான தீர்வினை ஆயுதப் போராட்டத்தின் மூலமே வென்றெடுக்க முடியும் என்ற நம்பிக்கையில்,

ஈழ விடுதலைக்கான ஆயுதப் போராட்ட களத்தில் முதல் முதலாக தோன்றிய தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் ஐம்பதாவது ஆண்டு விழா நிறைவிற்கு கட்சியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் அனைவரையும் விழாவில் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.