முல்லை மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் மனித எச்சங்கள் மீட்பு..!

0

மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் சுத்தம் செய்யும் பணிகள் இடம் பெற்று வரும் நிலையில், அங்கு மனித எச்சங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் வைத்திய சாலை வளாகத்தில் புதிதாக புனர்வாழ்வு வைத்திய சாலையை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்ட நிலையில் வைத்திய சாலை கட்டடங்களை அமைப்பதற்காக காணி துப்புரவு பணிகள் இடம்பெற்று வந்தன.

இதன் போது அங்கு கண்ணிவெடிகள் இருப்பதாக தெரிவித்து அந்த பகுதி மனிதநேய கண்ணிவெடி அகற்றும் பணியாளர்களினால் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகள் இடம்பெற்றன.

இந்நிலையில் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகள் இடம்பெற்று வந்த நிலையில் காணியின் ஒரு பகுதியில் மனித எச்சங்கள் காணப்பட்டதை அவதானித்த பணியாளர்கள் மாங்குளம் பொலிசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இந்நிலையில், இன்றைய தனம் குறித்த இடத்திற்கு வருகை தந்த முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி எஸ்.லெனின்குமார், குறித்த இடத்தை பார்வையிட்டார்.

மாங்குளம் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் விடயம் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி எஸ்.லெனின்குமாரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.