கொழுந்து பறிக்கும் பெண் சிலையாக நிற்பதற்கும் கோட்டா அரசில் உரிமை இல்லையா?

0

ஶ்ரீபாத தேசிய கல்வியற் கல்லூரியில் தமிழ் பிரிவு மாணவர்களால் நிர்மாணிக்கப்பட்ட ‘பெண் தோட்டத் தொழிலாளியின் சிலையை உடன் அகற்றுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஶ்ரீபாத தேசிய கல்வியற் கல்லூரியின் பீடாதிபதியாலேயே இந்த அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என மாணவர்கள் தெரிவித்தனர்.

இச்சிலையானது ஓர் இனத்தை மட்டும் பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளதாலேயே அகற்றுமாறு பணிக்கப்பட்டுள்ளதாகவும். கல்வி அமைச்சின் அனுமதி பெறப்படவில்லை எனவும் காரணம் கூறப்பட்டுள்ளது.

மலையகத் தமிழர்களின் வாழ்வியல் மற்றும் கலை, கலாசார, பண்பாட்டு விழுமியங்களை பிரதிபலிக்கும் வகையிலான மாபெரும் சித்திரக் கண்காட்சி, பத்தனை ஶ்ரீபாத தேசிய கல்வியற் கல்லூரியில் இன்று ஆரம்பமானது.

‘முகவரி வர்ணப் பிரவாகம்’ எனும் தொனிப் பொருளின் கீழ் நடைபெறும் இந்த சித்திரக் கண்காட்சியை, தமிழ்ப் பிரிவு மாணவர்களே ஏற்பாடு செய்துள்ளனர்

இதேவேளை தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளின் கல்வியறிவை உயர்த்தவே ஸ்ரீபாத கல்வியற் கல்லூரி உருவாக்கப்பட்டது என்பதும் குறிப்பித்தக்கது.