ஆசிரியர்களுக்கு அதிஷ்டம்; கோட்டா அரசின் மோசடி வெளியாகியது..!

0

கிராமப் புறங்களில் உள்ள ஆசிரியர்களுக்கு அவர்களது மாதச் சம்பளத்துக்கு மேலதிகமாக கொடுப்பனவு வழங்கப்படும் என கல்வி அமைச்சு இன்று (10) அறிவித்துள்ளது.

இதற்கான பின்னணிக் காரணமாக எதிர்வரும் 14ம் திகதி காலை 10 மணிக்கு அகில இலங்கை ஆசிரியர்கள் சம்பள உயர்வு வேண்டி கோட்டை புகையிரத நிலையம் முன் அடையாள உண்ணா விரதமும், எதிர்வரும் 26ம் திகதி சுகவீன விடுமுறைப் போராட்டத்திலும் ஈடுபடத் தீர்மானித்துள்ளனர்.

 

 

ஏற்கனவே கோட்டாபாயவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் அதிபர், ஆசிரியர் சம்பள முரண்பாடு தீர்க்கப்படும் என்ற போதும் சங்கங்களுடனான பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்துள்ளன.

இதனால் கிராமங்களில் கடமை புரியும் ஆசிரியர்களை ஊக்குவிக்க எனும் போர்வையில், ஆசிரியர்களுக்குள் பிளவை உருவாக்கவும் , ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டிய 6000 – 12,000 ரூபாய் வரையான இடைக் காலக் கொடுப்பனவை திசை திருப்பி இல்லாமல் செய்யவுமே புதிய அரசாங்கம் இத்தகைய அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.