கணக்கியல் பரீட்சைகளில் கணிப்பு பொறிகள் பயன்படுத்த அனுமதி..!

0

கணக்கியல் தொடர்பான பரீட்சைகளில் முதற் தடவையாக கணிப்பு பொறிகள் பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்தார்.

கணக்கியல் தொடர்பாக க.பொ.த.உயர்தர பிரிவில் பாடநெறிகளை தொடரும் மாணவர்களுக்கு இந்த வசதி வழங்கப்படவுள்ளது.

இதேவேளை அரச சேவைக்கான கணக்கியல் துறைசார் பரீட்சைகள் எதிர்வரும் 16 ஆம், 22 ஆம், 23 ஆம் திகதிகளில் இடம்பெறும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித மேலும் தெரிவித்துள்ளார்.