கொரோனா வைரஸ் அறிகுறி; பதுளை யுவதியின் மருத்துவ அறிக்கை வெளியாகியது..!

0

கொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகளுடன் பதுளை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட யுவதிக்கு, நோய்த் தொற்று இல்லை என வைத்திய சாலை நிர்வாகம் உறுதி செய்துள்ளது.

மொனராகலை பகுதியைச் சேர்ந்த குறித்த யுவதி, சீனாவில் கல்வி கற்று வந்த நிலையில், நாட்டுக்கு மீண்டும் வருகை தந்திருந்தார்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகளுடன் பதுளை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த யுவதிக்கு நோய்த் தொற்று இல்லை என வைத்திய சாலை நிர்வாகம் உறுதி செய்துள்ளது.

அவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்கான நோய் அறிகுறிகள் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் பரிசோதனைகளுக்காக பதுளை போதனா வைத்திய சாலையில் கடந்த 5ஆம் திகதி அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இதனையடுத்து, 22 வயதுடைய குறித்த யுவதி விசேட பாதுகாப்பு உடைகள் அணிவிக்கப்பட்டு, பல்வேறு கட்ட மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.

இந்நிலையில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என வைத்திய பரிசோதனைகளின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.