சமூக ஊடகங்களும் செய்தித் தளங்களும் சமூக அக்கறையுடன் செயற்பட வேண்டுமாம்..!

0

உள்நாட்டிலும் புலம்பெயர் தமிழர்கள் மத்தியிலும் யாழ் பல்கலைக் கழகம் அதிக கவனம் பெறும் இடமாக காலங் காலமாக அடையாளப் படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இங்கே இடம் பெறும் சிறிய தவறுகளும் உடனடியாக ஊடக வெளிகளில் படம்போட்டு காட்டப்படுகின்றன. அவ்வாறான ஒரு விடயமாகவே இந்த பகிடிவதை சம்பவமும் அமைந்திருக்கின்றது.

குறித்த பகிடிவதை குற்றச்சாட்டுடன் தொடர்புடைய மாணவர்கள் ஒழுக்காற்று அதிகாரிகளினால் பூரணமாக விசாரணை செய்யப்பட்டு குற்றம் கண்டு பிடிக்கப்பட்டு தண்டிக்கப்படுவார்கள்.

குறித்த விடயம் தொடர்பாக சமூக ஊடகங்களில் பரப்பப்படும் திரிவுபடுத்தப்பட்ட கருத்துக்களும் சம்பவங்களும் தொடர்பில் சமூக ஊடக உரிமையாளர்களும் செய்தித் தளங்களும் சமூக அக்கறையுடன் செயற்பட வேண்டுமென்றும் யாழ் பல்கலை மாணவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளது.

யாழ் பல்கலைக் கழக கிளிநொச்சி வளாகத்தின் தொழிநுட்பப் பிரிவுக்கு புதுமுக மாணவர்களாக வரவிருப்போரை சிரேஸ்ட மாணவர்கள் தொலைபேசி மூலமாக பகிடிவதையில் ஈடுபடுத்தியதாக செய்திகள் வெளியாகியிருந்தது.

இந் நிலையில் தமிழர் விவகாரங்கள் தொடர்பாகவும் தமிழ் சமூகத்தின் சார்பிலும் குரல் கொடுத்து வரும் ஓர் அடையாளமாக யாழ் பல்கலைக் கழகம் காணப்படுகிறது என மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை இவ்வாறான சம்பவங்கள் ஊடகங்கள் மூலம் வெளிப்படுத்தப் பட்டமையாலேயே தேசியம் என்ற அடையாளத்தில் மறைக்கப்பட்ட சில மாணவர்களின் சுயரூபம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறான பட்டதாரிகளுக்கு எதிர்காலத்தில் ஆசிரியர், நிர்வாக சேவை, எஞ்சினியர், பொலிஸ், கிராம சேவகர், சமுர்த்தி அலுவலர் போன்ற மாணவர்கள் மற்றும் மக்களுடன் தொடர்புடைய நியமனங்கள் வழங்கப்பட்டால் துஸ்பிரோகம், சமூகச் சீரழிவுகள் நடைபெறாதா?

எனவே இது தொடர்பிலும் சிந்தித்து குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்குமாறு உரியவர்களைக் கேட்டுக் கொள்கின்றோம்.