மாணவியிடம் இழிவாக நடந்துக் கொள்ள முயற்சித்த ஆசிரியருக்கு நேர்ந்த கதி..!

0

கிளிநொச்சி கிராமப்புற பாடசாலை ஒன்றில் 8ம் தர மாணவியுடன் தகாத முறையில் நடந்து கொள்ள முயற்சித்த ஆசிரியர் ஒருவா் கிளிநொச்சி சிறுவர், பெண்கள் பிரிவுப் பொலிஸாாினால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று இடம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

கிளிநொச்சி நகரை அண்டிய பகுதியில் உள்ள பாரதிபுரம் கிராமத்திலுள்ள பாடசாலையில் வகுப்பறையில் வைத்து மாணவி ஒருவருடன் ஆசிாியர் ஒருவா் தகாத முறையில் நடந்து கொள்ள முயற்சித்துள்ளார்.

இதனையடுத்து சுதாகரித்துக் கொண்ட மாணவி பெற்றோருக்கு சம்பவத்தை உடனடியாகவே கூறியிருக்கின்றார். பின்னர் பெற்றோர் பாடசாலை அதிபரிடம் விடயத்தை கூறியிருக்கின்றனர். எனினும் பாடசாலையின் அதிபர் அதனை கவனத்தில் எடுக்கவில்லை.

இதனையடுத்து மாணவியின் உறவினர்கள், மற்றும் பொது மக்கள் ஆசிரியரை பிடித்து சிறந்த கவனிப்பின் பின் வகுப்பறைக்குள் வைத்து பூட்டியதுடன், பெற்றோர் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் சிறுவர், பெண்கள் விவகார பிாிவுக்கு முறைப்பாடு செய்துள்ளனர்.

இதனையடுத்து உடனடியாக பாடசாலைக்கு விரைந்து சென்ற பொலிஸார் ஆசிாியரை கைது செய்துள்ளனர். கடந்த காலங்களில் அரசியல் ரீதியாக தகுதியற்றவர்களுக்கு வேலை வழங்கியதால் ஏற்பட்ட நிலையே இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சம்பவம் உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் ஆசிரிய சேவையிலிருந்து நிதந்தரமாக நிறுத்துவதே அவருக்கான குறைந்த பட்ச தண்டனையாகும். இதன் மூலமே எதிர்காலத்தில் இவ்வாறான தவறுகளை முற்றாகக் கட்டுப்படுத்த முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.