கோட்டாவின் 130 பில்லியன் ரூபாய் குறை நிரப்பு பிரேரணை; முட்டுக்கட்டை போட்ட சஜித்..!

0

கடந்த அரசாங்கத்தினால் செலுத்தப்படாத கொடுப்பனவுகளை செலுத்தவதற்காக 130 பில்லியன் ரூபாய் குறை நிரப்பு பிரேரணைக்கான நாடாளுமன்ற அனுமதியை அரசாங்கம் கோரியுள்ளது.

கடந்த அரசாங்கத்தின் செலவுகள் மற்றும் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை குறித்து இன்று நாடாளுமன்றத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விளக்கினார்.

அத்தோடு இந்த குறை நிரப்பு பிரேரணை தொடர்பான முழுமையான வடிவம் இன்னும் சில தினங்களில் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் என்றும் மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக் காட்டினார்.

இருப்பினும் இந்த குறை நிரப்பு பிரேரணை தொடர்பாக நாடாளுமன்றில் விவாதம் இடம்பெற வேண்டும் என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேட்டுக் கொண்டார்.

கடந்த அரசாங்கத்தின் நிலுவைத் தொகையை வழங்குவதற்கான நாடாளுமன்றத்தில் குறை நிரப்பு பிரேரணையை சமர்ப்பிக்கும் திட்டத்திற்கு அமைச்சரவை ஏற்கனவே அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.