அரசின் எதிர்ப்பையும் மீறி கொழும்பில் தமிழில் இசைக்கப்பட்ட தேசிய கீதம்..!

0

இலங்கையின் 72 ஆவது சுதந்திர தினமான இன்று தேசிய கீதம் சிங்களத்தில் மட்டுமே பாடப்படு​ம் என, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் அறிவித்திருந்தது.

அதன் பிரகாரம், ​சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்ற பிரதான வைபவத்திலும் சிங்கள மொழியில் மட்டுமே பாடப்பட்டது.

எனினும், அரசாங்கத்தின் மேலாதிக்கவாத வெறிக்கு எதிராக, சிங்கள, தமிழ் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் சிலர் இணைந்து கொழும்பில், தேசியக் கீதத்தை தமிழ் மொழியில், இன்றுக் காலை இசைத்துள்ளனர்.

இந்நிலையில் அது தொடர்பிலான வீடியோ, சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகின்றது.