ஸ்ரீலங்கா அரசின் பொறுப்பற்ற பதிலை கண்டித்து மாபெரும் போராட்டம்..!

0

இலங்கையின் சுதந்திர தினத்தை கரி நாளாக பிரகடனப்படுத்தி, நீதிக்காக காணாமலாக்கப்பட்ட உறவுககளின் போராட்டம் சற்று முன்னர் கிளிநொச்சியில் ஆரம்பமாகியது.

மக்களின் போராட்டங்களை யாருமே கண்டு கொள்ளாத நிலையிலே விரக்தியின் விளிம்பில் நின்று இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி நீதிக்காக எமது உறவுகள் போராடிக் கொண்டிருக்கின்றனர்.

அரசின் பொறுப்பற்ற பதிலை கண்டிப்பதுடன் சர்வதேச விசாரணையே எமக்கு வேண்டும், ஒப்படைக்கப்பட்ட எமது பிள்ளைகள் எங்கே, மரணச் சான்றிதழ் வேண்டாம், சர்வதேசமே பதில் சொல் போன்ற கோசங்களுடன் காணாமல் ஆக்கப்படடோருக்கு நீதி வேண்டிய பெற்றோர் மற்றும் பிள்ளைகளின் அவல ஓலம் வானைப் பிளந்து ஒலித்துக் கொண்டிருக்கிது.