ரஷ்ய தளபதி பாதுகாப்பு செயலாளர் சந்திப்பு; மீண்டும் துளிர் விடும் உறவு..!

0

இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்ட ரஷ்ய குடியரசின் இராணுவ தளபதி ஒலேக் சல்யகோவ் இன்றைய தினம் (3) ஆம் திகதி பாதுகாப்பு செயலாளரான ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன சைவ் சந்தித்தார்.

இச்சந்திப்பின் போது இரு நாடுகளுக்கு இடையில் நிலவும் நல்லிணக்கம் மற்றும் புரிந்துணர்வை மேம்படுத்தும் விடயங்கள் தொடர்பாகவும், பிராந்திய மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான விடயங்களை பற்றி கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

இறுதியில் இவர்களது சந்திப்பை நினைவு படுத்தும் முகமாக இருவர்களுக்கும் இடையில் நினைவுச் சின்னங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.