மட்டக்களப்பில் ஔவை விழாவை முன்னிட்டு வில்லுப் பாட்டுப் போட்டி..!

0

கதிரவன் பட்டிமன்றப் பேரவையின் ஔவை அவை நடாத்தவுள்ள “ஔவை விழா” வுக்கான மாவட்ட மட்ட அறநெறிப் பாடசாலைகளுக்கு இடையிலான வில்லுப்பாட்டு போட்டி இன்று வின்சன்ட் மகளீர் தேசிய பாடசாலையில் நடைபெற்றது.

முன்னாள் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் அவர்களும், மட்டக்களப்பு தமிழ்ச் சங்கத்தின் தலைவர் தேசபந்து செல்வராஜா அவர்களும் பிரதம விருந்தினர்களாக வருகை தந்து, சிறப்புரை வழங்கி, வில்லுப் பாட்டுப் போட்டியை ஆரம்பித்து வைத்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அறநெறிப் பாடசாலைகள் பல வருகை தந்து ஆர்வத்தோடு பங்குபற்றின. இன் நிகழ்வுக்கு மட்டக்களப்பு வேல்முருகன் சகோதரர்கள் அனுசரணை வழங்குகின்றனர்.

வெற்றி பெற்ற அணிகளுக்கு வேல்முருகன் சகோதரர்களின் பெறுமதியான பணப்பரிசை எதிர்வரும் 29ம் திகதி நடைபெறவுள்ள ஔவை விழாவில் வழங்கவுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.