காத்தான்குடியில் மாறுவேடத்தில் கஞ்சா வியாபாரியை மடக்கிப் பிடித்த அதிரடிப்படை..!

0

மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் ஒரு கிலோ 250 கிராம் கேரள கஞ்சாவுடன் கஞ்சா வியாபாரி ஒருவரை இன்று ஞாயிற்றுக்கிழமை (02) மாலை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து; விசேட அதிரடிப்படையினர் கஞ்சா வியாபாரியிடம் கஞ்சா வேண்டுவதாக மாறு வேடம் பூண்டு சம்பவ தினமான இன்று மாலை 6 மணியளவில் காத்தான்குடி பிரதான வீதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்

இந்த நிலையில் கஞ்சா வியாபாரி கஞ்சாவுடன் வந்திருந்தபோது விசேட அதிரடிப்படையினர் அவரை சுற்றிவளைத்து மடக்கி பிடித்துள்ளனர் அவரிடம் இருந்து ஒரு கிலோ 250 கிராம் கஞ்சாவை மீட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவரை பொலிசாரிடம் ஓப்படைத்துள்ளதுடன் கைது செய்யப்பட்டவர் பொலநறுவை தறப்பளை பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடையவர் எனவும் பொலிசார் தெரிவித்தனர்