விமான கொள்வனவில் நிதி மோசடி; கோட்டா விசாரணைக்கு பணிப்பு..!

0

விமானங்களை கொள்வனவு செய்வதற்காக ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கும் எயார் பஸ் நிறுவனத்திற்கும் இடையில் இடம் பெற்ற கொடுக்கல் வாங்கலின் போது இடம் பெற்றதாக கூறப்படும் நிதி மோசடிகள் குறித்து முழுமையாக விசாரணை செய்யுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

தேசிய விமான சேவை, விமான உற்பத்தியில் ஈடுபட்டுள்ள எயார் பஸ் நிறுவனத்துடனான கொடுக்கல் வாங்கலின் போது சில நபர்களினால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் நிதி மோசடி குறித்த தகவல்கள் இன்றைய தினம் (02) வெளியான வார இறுதி ஆங்கில செய்திப் பத்திரிகைகளிலும் நேற்றைய தினம் (01) இணைய தளங்களிலும் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

இந்த குற்றச்சாட்டு குறித்து அனைத்து தரப்புகளையும் உள்ளடக்கிய வகையில் உடனடியாக முழுமையான விசாரணையொன்றை மேற்கொண்டு அது பற்றி தனக்கு அறிவிக்குமாறு ஊடகச் செய்திகளை பார்வையிட்ட ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.