ஆனந்த சங்கரியின் மறுப்பினால் அதிரடி நடவடிக்கைக்கு தயாராகும் ஈபிஆர்எல்எப்..!

0

ஈபிஆர்எல்எவ் கட்சியை தமிழர் ஐக்கிய முன்னணி எனப் பெயர் மாற்றுவதில் தனக்கு உடன்பாடு கிடையாது என ஆனந்தசங்கரி தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் மகிந்த தேசப்பிரியவிற்கு எழுத்தில் அறிவித்துள்ளார்.

குறித்த விடயத்தில் கட்சியின் பெயரை தமிழிலும் சிங்களத்திலும் உச்சரிக்கும் போது எந்த மாறுபாடும் காணாத போதும் ஆங்கிலத்தில் உச்சரித்து அதனை குறுக்கி உச்சரிக்கும் போது ரியூஎவ் என்றே உச்சரிக்கும் தன்மை காணப்படுகின்றது.

இவ்வாறு ரி.யூ.எவ் என்ற உச்சரிப்பானது தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஆரம்ப பெயரின் உச்சரிப்பாக காணப்படுவதனால் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு எழுத்தில் கடிதம் அனுப்பப்பட்டு ஏதும் ஆட்சேபனை இருந்தால் சமர்ப்பிக்குமாறும் கோரப்பட்டது.

ஈபிஆர்எல்எவ் கட்சியை தமிழர் ஐக்கிய முன்னணி எனப் பெயர் மாற்றுவதில் தனக்கு உடன்பாடு கிடையாது என ஆனந்தசங்கரி தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் மகிந்த தேசப்பிரியவிற்கு எழுத்தில் அறிவித்துள்ளார். இதனால் குறித்த பெயரையே எடுப்பதற்கான அதிரடி நடவடிக்கையில் ஈபிஆர்எல்எவ் இறங்கியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இதேவேளை எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் பதிவு செய்யப்பட்ட தமிழர் ஐக்கிய முன்னணி எனும் கட்சியின் பெயரிலேயே முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையில் தமி்ழ் தேசிய மாற்று அணி களமிறங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.