உலக சந்தையில் எரிபொருள் விலை வீழ்ச்சி; உள்ளூர் விலைகளில் மாற்றமில்லை..!

0

உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை வீழ்ச்சியடைந்தாலும், உள்ளூர் எரிபொருள் விலை மாறாமல் இருக்கும் என்று பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

உலக சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெயின் விலை ஜனவரி முதலாம் திகதி 62 டொலராக இருந்தது, அமெரிக்கா மற்றும் ஈரான் மோதல் வெடித்தபோது ஜனவரி 6 ஆம் திகதி 67 டொலராக உயர்ந்தது. ஜனவரி 7 ஆம் தேதி விலைகள் 71 டொலர்களாக ஆக உயர்ந்து, எனினும் தற்போது 59 டொலர்களாகக் குறைவடைந்துள்ளது.

எனவே சர்வதேச சந்தையின் இந்த விலைகளில் ஏற்ற இறக்கம் உள்ள போதிலும் உள்ளூர் சந்தையில் தற்போது விலையில் மாற்றம் ஏற்படாது என அமைச்சு சுட்டிக் காட்டியுள்ளது.