நடிகர் சிம்புவால் வாழ்க்கையைத் தொலைத்த பிரபல நடிகை..!

0

நடிகை சனம் ஷெட்டி, தம் மீது கூறிய புகாருக்கு, அவர் மீது தற்போதும் நன்றியுடன் தான் இருக்கிறேன். அவர் மீது வழக்கு தொடுக்க வேண்டும் என்ற எண்ணமில்லை.” என விளக்கமளித்துள்ளார் பிக்பொஸ் பிரபலம் தர்ஷன்.

பிக் பொஸ் பிரபலம் தர்ஷன் திருமணம் செய்வதாக கூறிவிட்டு தன்னை ஏமாற்றி விட்டதாக திரைப்பட நடிகை சனம் ஷெட்டி நேற்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.

மேலும், இரு வீட்டார் சம்மதத்துடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றதோடு, திருமண திகதியும் முடிவு செய்த பிறகு, தர்ஷன், திடீரென்று திருமணத்தை நிறுத்தியிருக்கிறார், அத்துடன் தர்ஷனுக்கு இதுவரை தான் ரூ.15 இலட்சம் செலவு செய்திருப்பதாகவும், தான் செலவு செய்த பணத்தை திருப்பி கேட்கவில்லை.

ஆனால் தர்ஷனின் வாழ்க்கையில் நான் இருந்தேன், என்பதை அவர் பகிரங்கமாக ஒப்புக் கொள்ள வேண்டும், என்றும் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக சென்னையிலுள்ள தனியார் நட்சத்திர ஹொட்டேலில் சந்தித்து, விளக்கமளித்தார்.

அவர் அளித்த விளக்கத்தில்,

“2016ல் சென்னைக்கு வந்தேன், ஒரு புரொடக்சன் கம்பனியில் வேலை செய்யத் தொடங்கினேன். பச்சைப்பா சில்க்ஸ் என்ற நிறுவனத்தின் விளம்பரத்தின் போது தான் அவர் எமக்கு முதன் முதலாக அறிமுகமானார், திரைத் துறைச் சார்ந்து எமக்கு சனம் ஷெட்டி நிறைய உதவி செய்துள்ளார்,

அதை நான் மறுக்க மாட்டேன். போத்தீஸ் விளம்பரத்தில் பிரபலமானதால் எம்மை விஜய் டிவி தரப்பில் அழைத்தார்கள். பிக் பொஸிலிருந்து வெளியே வந்த பின்னர் ஒரு மாதத்திற்கு என் ஃபேஸ்புக் பக்கத்தை அவர் தான் பயன்படுத்தி வந்தார்.

துவிச்சக்கர வண்டியை விற்று, சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று வந்தேன், நடிகை சனம் கொடுக்கும் நிபந்தனைகளுக்கு எம்மால் ஈடு கொடுக்க முடியாது என்று கூறி விட்டேன். அப்போது அவர் தற்கொலை செய்து கொள்வேன் என்று என்னை மிரட்டினார்.

சனம் வீட்டாருக்கு மட்டுமே நிச்சயமானது தெரியும், என் வீட்டிற்கு கண்டிப்பாக அது தெரியாது, காரணம் எனக்கு ஒரு தங்கை இருக்கிறார். அவருக்கு திருமணம் ஆக வேண்டும் என்பதால் தான்.அவருக்கும் கல்யாணமாக வேண்டும் என்பதால் மூன்றரை இலட்சம் எமக்கு கொடுத்திருந்தார், அதை நான் பிக் பாஸில் வெற்றிப் பெற்ற பணம் வந்ததும், அவரிடம் திருப்பிக் கொடுத்து விட்டேன்.

பிக் பொஸ் போட்டியின் இடையே வெளியே வந்த போது, அவர் மற்றொருவருடன் தொடர்பில் இருந்தார், அதற்கான ஆதராம் எம்மிடம் உள்ளது, அந்த பிரபல நபர் யார் என்பது கூற முடியாது. இதற்கு பின்னர் நான் எப்படி அவருடன் வாழ முடியும்.

அவர் மீது நன்றியுடன் நான் உள்ளேன், வழக்கு எல்லாம் நான் தொடர மாட்டேன். காவல் ஆணையர் அழைத்து விளக்கம் கேட்டால், வீடியோ,வாய்ஸ் ரெக்கார்டர் போன்ற ஆதாரங்களை சமர்பிப்பேன். எம்மைப் பொறுத்த வரை அவர் மீது வழக்கு தொடுக்க வேண்டும் என்கிற எண்ணம் இல்லை, என்றார்.