மீண்டும் யுத்த காலத்தை நினைவுபடுத்தும் வவுனியாவின் பாதுகாப்பு கெடுபிடிகள்…!

0

வவுனியா குருமன்காடு சந்தியில் இன்று (01.02.2020) காலை 7.00 மணி முதல் இராணுவத்தினர் சோதனைச் சாவடி அமைத்து சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

வவுனியா – மன்னார் பிரதான வீதியுடாக பயணிக்கும் பேருந்துகள் மற்றும் வாகனங்கள் நிறுத்தி சோதனைக்கு உட்படுத்தப் பட்டுள்ளதுடன் பதிவு நடவடிக்கையும் முன்னேடுக்கப் படுகின்றது.

 

 

திடீரேன அமைக்கப்பட்ட இவ் சோதனை சாவடி காரணமாக குருமண்காட்டு சந்தியில் சற்றுப் பதட்டமான நிலை காணப்படுவதுடன் மக்கள் அச்சத்துடன் பயணத்தினை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை ஊடகவியலாளர்கள் சோதனை நடவடிக்கையினை புகைப்படம் , காணொளி எடுப்பதற்கு இராணுவத்தினர் தடை விதித்ததுடன் எடுக்கப்பட்ட காணொளிகளை அழிக்குமாறும் உத்தரவு பிறப்பித்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இவ்வாறான தொடர் பாதுகாப்பு கெடுபிடிகள் தென்பகுதியில் இல்லை என்பதுடன் வவுனியாவின் பல இடங்களில் இவ்வாறான வீதித் தடைகள் போடப்பட்டு மக்கள் இறக்கப்பட்டு சோதனைகள் தொடர்கின்றன என்பதும் குறி்பிடத்தக்கது.