யாழில் மதுபோதையால் வேலையை இழந்த இ.போ.ச பஸ் சாரதி..!

0

மதுபோதையில் இ.போ.ச பஸ்ஸை செலுத்திய சாரதியின் சேவையை உடனடியாக இரத்து செய்யுமாறு, போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீரவால் போக்குவரத்து அமைச்சின் செயலாளர் காமினி செனவிரத்னவுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

பொலிஸ், பொலிஸ் விசேட படையினர் மற்றும் இராணுவத்தினரால் யாழ் நாவற்குழியில் குறித்த பஸ் சோதனையிடப்பட்டது.

இதன் போது சாரதி மதுபோதையில் இருந்துள்ளதுடன் அவரது போக்குவரத்து பையில் சாராயம், பியர் என்பன இருந்தமையாலேயே அவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

குறித்த சாரதி யாழ்ப்பாணத்திலிருந்து அக்கறைப்பற்று வரை பயணிக்கும் இ.போ.ச பஸ்ஸை நேற்று மது போதையில் செலுத்தி வந்தமையால் யாழ்ப்பாண பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார்.

இந்நிலையில் போக்குவரத்து அமைச்சர் குறித்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.