சுதந்திர தினத்தை முன்னிட்டு 3ஆம் திகதி பாடசாலைகளுக்கு விஷேட விடுமுறை..!

0

எதிர்வரும் 4ஆம் திகதி கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் கொண்டாடவுள்ள தேசிய சுதந்திரத் தின நிகழ்வுகளுக்காக நடத்தப்படும் ஒத்திகை நிகழ்வுகள் காரணமாக கொழும்பு பிரதேசத்தில் 15 பிரதான பாடசாலைகளுக்கு எதிர்வரும் 03 ஆம் திகதி விடுமுறை வழங்கப்படவுள்ளது.

அதன் பிரகாரம், கொழும்பு டீ.எஸ். சேனாநாயக்க வித்தியாலயம், கொழும்பு ரோயல் கல்லூரி, கொழும்பு தர்ஸ்டன் கல்லூரி, கொழும்பு யசோதரா கல்லூரி, கொழும்பு மியுசியஸ் கல்லூரி, கொழும்பு செயின்ட் பிரிட்ஜெட் கல்லூரி, Lady’s College – Colombo , Colombo International School – Colombo, Wycherley International School – Colombo ஆகிய பாடசாலைகளுக்கு இந்த விஷேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதேவேளை நாட்டிலுள்ள ஏனைய பாடசாலைகள் வழமை போன்று இயங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.