மாணவர்களின் சீருடை, சப்பாத்து வவுச்சர் தொடர்பில் வெளியாகிய முக்கிய அறிவிப்பு..!

0

பாடசாலை மாணவர்களுக்கான சீருடைத் துணி மற்றும் காலணிகளுக்காக வழங்கப்படும் வவுச்சருக்கான செல்லுபடிக் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த வவுச்சருக்கான நிறைவு காலம் ஜனவரி மாதம் 31 ஆம் திகதியுடன் எனக் குறிப்பிடப்பட்ட போதும் இது எதிர்வரும் பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டிருப்பதாக கல்வி அமைச்சு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பாடசாலை மாணவர்கள் இந்த வவுச்சர்களில் பாடசாலைக்கு பொருத்தமற்ற சப்பாத்து, உடைகள் வாங்குவதுடன், சில கடைகளில் சில நூறு ரூபாய்களைக் கழித்து பணம் பெறும் சம்பவங்களும் இடம்பெற்று வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.