பயங்கரவாதி சர்கானின் கொலைவெறி ஆட்டத்தால் படுகாயமடைந்த யாழ். யுவதி உயிரிழப்பு..!

0

கடந்த வருடம் ஏப்ரல் 21ம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற முஸ்லீம் பயங்கரவாதி சர்கானின் தலைமையில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த யாழ் யுவதியொருவர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 26 வயதான நிரின் ப்ளோரிடா என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் கடந்த வருடம் ஏப்ரல் 21ஆம் திகதி இடம் பெற்ற பயங்கரவாத தாக்குதலில் இவர் படுகாயமடைந்திருந்தார்.

இவ்வாறாக கடந்த 9 மாதங்களாக வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் யுவதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.