காலி, வத்துரம்ப பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றில் 11ஆம் தரத்தில் கல்வி கற்றுவரும் 7 மாணவிகளை பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கியதாகக் கூறப்படும் பிரதி அதிபர் ஒருவர் நேற்று முன்தினம் மாலை வத்துரம்ப பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சில மாதங்களாக குறித்த மாணவிகளுக்கு சந்தேக நபர் பாலியல் தொந்தரவு செய்துள்ளதாக பொலிஸ் அவசர அழைப்பு இலக்கத்துக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது. இதன் பிரகாரம், பாடசாலைக்கு சென்ற பொலிஸார் மாணவிகள் மற்றும் வகுப்பாசிரியரிடம் வாக்குமூலங்களை பெற்ற தன் பின்னர் சந்தேக நபரான பிரதி அதிபரை கைது செய்துள்ளனர்.
வத்துரம்ப பொலிஸ் நிலையத்தின் புலனாய்வு அதிகாரிகளான யூ.பி.அபேரத்ன, சார்ஜன்ட் அமரவர்தன ஆகியோருக்கு கிடைத்த உளவுத் தகவலில் பொலிஸ் பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் ருக்மன், சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தின் பொறுப்பதிகாரி, உப பொலிஸ் பரிசோதகர் மல்காந்தி, சார்ஜன்ட்களான பிரியந்த, விஜேசிங்க ஆகியோர் விசாரணைகளை நடத்தி சந்தேகநபரை கைது செய்திருந்தனர். இதனையடுத்து சந்தேக நபரை நேற்று நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்திருந்த வத்துரம்ப பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.