மட்டு புதிய அரசாங்க அதிபர் கடமைகளை பொறுப்பேற்றார்..!

0

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக திருமதி கலாமதி பத்மராஜா இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

இன்று காலை மாவட்ட செயலகத்திற்கு வருகை தந்த புதிய மாவட்ட அரசாங்க அதிபருக்கு மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள், மேலதிக அரசாங்க அதிபர்களினால் வரவேற்பளிக்கப்பட்டது.

ஆதனை தொடர்ந்து மாவட்ட செயலகத்தில் உள்ள மகா கணபதி ஆலயத்தில் விசேட பூஜைகள் நடைபெற்றது. வழிபாடுகளை தொடர்ந்து 10.35மணியளவில் தனது கடமைகளை புதிய அரசாங்க அதிபர் பொறுப்பேற்றுக் கொண்டார்.

புதிய அரசாங்க அதிபருக்கு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த்,மேலதிக அரசாங்க அதிபர் காணி திருமதி நவரூபரஞ்சினி முகுந்தன் உட்பட பிரதேச செயலாளர்கள்,உதவி பிரதேச செயலாளர், திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

அதனை தொடர்ந்து மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் உத்தியோகத்தர்களுடனான கலந்துரையாடலிலும் கலந்து கொண்டார்.

மட்டக்களப்பினை சேர்ந்த திருமதி கலாமதி பத்மராஜா 29வருடங்கள் நிர்வாக சேவையில் அனுபவத்தினைக் கொண்டவர் என்பதுடன், முதல் நியமனத்தினை கல்முனை உதவி பிரதேச செயலாளராக பெற்றுக் கொண்டவராவார்.

அத்துடன் அதன் பின்னர் வாழைச்சேனை மற்றும் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளராகவும் கிழக்கு மாகாண சபையில் பிரதி செயலாளராகவும் அவர் கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இவர் சிறையில் உள்ள சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானின் விசுவாசி எனக் கூறப் படுகின்றதும் குறிப்பிடத்தக்கது.