அதிர்ச்சியில் இலங்கை; முதலாவது கொரோனா வைரஸ் நோயாளி கண்டுபிடிப்பு..!

0

உலகை அச்சுறுத்தலில் வைத்து இருக்கும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இலங்கையில் ஒருவர் பாதிக்கப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் துவங்கிய கொரோனா வைரஸ் தாக்குதலானது உலகநாடுகள் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.

இந்த வைரஸ் தாக்கத்தால் 81 பேர் கொல்லப்பட்டதோடு, 2,700 க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனை தடுக்கும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் முதல் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளி இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

அவர் 46 வயதான ஒரு சீனப் பெண் என்று கூறப்படுகிறது. வைரஸ் பரவாமல் கட்டுப்படுத்த தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால், பீதி அடைய வேண்டாம் என்று சுகாதார மேம்பாட்டு பணியகம் கேட்டுக் கொண்டுள்ளது.

சீனாவின் ஹூபே மாகாணத்திலிருந்து வருகை தந்திருந்த ஒரு பெண் தொற்றுநோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் உறுதி செய்யப்பட்டிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.