சீனாவின் பயோ-வெப்பன் ஆய்வு கூடத்தில் இருந்து பரவியதா கொரோனா?

0

சீனாவையும் முழு உலகையும் உலுக்கி வரும் கொரோனா வைரஸுக்கு இதுவரை 56 பேர் உயிரிழந்துள்ளனர். 2,000 இற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டின் பயோ-வெப்பன்(உயிர் ஆயுதங்கள்) தயாரிக்கும் ஆய்வு கூடத்தில் இருந்து வைரஸ் உருவாகியிருக்கலாம் என அமெரிக்க செய்திகள் தெரிவிக்கின்றன.

உலகிற்கு தெரியாமல் சீனா கிருமிகளை உருவாக்கி மனிதர்களைக் கொல்லும் உயிர்-ஆயுதங்களை (பயோ-வெப்பன்) உருவாக்கும் ஆய்வு கூடத்தை வுஹான் மாநிலத்தில் சீனா செயல்படுத்தி வந்தது. அங்கிருந்து பரவி இருக்கலாம் என்று தி வோஷிங்டன் டைம்ஸ் நாளேட்டுக்கு இஸ்ரேலைச் சேர்ந்த உயிரியல் விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.

மத்திய சீன நகரமான வுஹான் நகரில்தான் முதன் முதலாக கொரோனா வைரஸ் காய்ச்சல் கண்டறியப்பட்டது. சீனா முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் அந்த வைரஸ் ஆசியாவின் இதர நாடுகளுக்கும் வேகமாகப் பரவி வருகிறது.

இதுவரை கொரோனா வைரஸ்க்கு 56 பேர் பலியாகியுள்ளனர். 250 க்கும் மேற்பட்டோர் ஆபத்தான கட்டத்தில் உள்ளார்கள். 2,000 இற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளார்கள் எனச் செய்திகள் தெரிவிக்கின்றன.