சஜித்தின் 90 மில்லியன் கடன் தொடர்பில் கணக்கு கேட்கும் ரணில்..!

0

ஐக்கிய தேசியக் கட்சியின் உள்ளிடத்துப் பூசல்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளன. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவி மற்றும் எதிர்க் கட்சித் தலைவர் பதவி தொடர்பில் இன்னும் தீராத தலையிடி வந்து கொண்டிருக்கும் நேரத்தில், சஜித் பிரேமதாசவுக்கு ரணிலினால் மீண்டும் தலையிடி ஏற்பட்டுள்ளது.

கடந்த 2019 ஜனாதிபதித் தேர்தலின் போது சஜித் பிரேமதாச தேர்தலுக்காகச் செலவு செய்த தொகை தொடர்பில் கணக்குக் கேட்டுள்ளார் ரணில்.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்ட சஜித் பிரேமதாச 900 இலட்சம் எவ்வாறு கடன்பட்டார் என்பதைத் தனக்குக் கணக்குக் காட்ட வேண்டும் என்று கேட்பதற்கு கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தீர்மானம் எடுத்துள்ளதாகத் தெரிய வருகின்றது.

ஐதேகவின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையின் கூடிய கூட்டமொன்றின் போது அவர் மேற்கண்ட விடயம் தொடர்பில் குறிப்பிட்டுள்ளார்.

சஜித் பிரேமதாச இவ்வளவு பாரிய கடனை எதற்காக, எவ்வாறு செலவு செய்தார் என்பது பற்றித் தெளிவாக எழுத்து மூலம் கோரவுள்ளதாம் ஐக்கிய தேசியக் கட்சி மேலிடம்.

எவ்வாறாயினும், தான் தேர்தலுக்காக அன்றி வேறு எதற்கும் 90 மில்லியன் ரூபா பணத்தை செலவு செய்யவில்லை என உறுதியாகக் கூறியுள்ளார் சஜித். எனினும், உள்ளிடத்தில் இது தொடர்பில் பல்வேறு கிசுகிசுக்கள் கசிந்து கொண்டுதான் இருக்கின்றன.