வவுனியா புளியங்குளத்தில் போதைப் பொருட்களுடன் 6 பேர் கைது..!

0

வவுனியா புளியங்குளம் பகுதியில் காவல் துறையினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்கள் போதைப் பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதாகியுள்ளனர்.

கைதானவர்களிடமிருந்து 14 கிலோ 705 கிராம் ஹெரோயின் ரக போதைப் பொருட்களும் பொலிசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த நபர்கள் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டதாக புளியங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.